• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏன் இந்த இரட்டை வேடம்? அதிமுகவிற்கு ஸ்டாலின் கேள்வி

January 10, 2019 தண்டோரா குழு

உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் சட்டத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டுவருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைப்போல், ராஜ்யசபாவிலும் நேற்று, இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. அப்போது எதிர்த்து விழுந்த ஓட்டுக்கள் 7 மட்டுமே. முன்னதாக அதிமுக வெளிநடப்பு செய்துவிட்டது. அதிமுகவும் எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும் என்று, ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் சட்டத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டுவருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

சமூகநீதிக்கு வேட்டுவைக்கும் மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன்.அதைச் செய்யாத அதிமுக, நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? அநீதி இழைக்கும் BJPக்கு பாதம் தாங்கி நடப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க