• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“எனது மாமியாரும், கணவரும் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் ” – மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

April 17, 2017 தண்டோரா குழு

என்னை கொலை செய்ய என் கணவரும், மாமியாரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் திவ்யா மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் அருகே வசித்து வருகிறார் திவ்யா(27). இவரும் பொள்ளாச்சி அருகே சித்தூரை சார்ந்த மோகன் என்பவரும் காதலித்து 2௦11-ம் ஆண்டு இருவிட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மோகனின் தந்தை(திவ்யாவின் மாமானார்) குணசேகர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திவ்யாவின் மாமியார் சுமதி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திவ்யாவின் கணவர் மோகனை பொள்ளாச்சிக்கு அழைத்ததாகவும் அதன் பின் அவர் அங்கேயே தனது தாயுடன் தங்கிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. தற்போது மோகனுக்கு அவருடைய தாய் இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாகாவும் அதற்காக திவ்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகவும் திவ்யா தரப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா அளித்த மனுவில்

“ எனது கணவர் மோகன் அவரது தாய் சுமதியுடன் சேர்ந்து கொண்டு என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்ற வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திவ்யா கூறுகையில்

“ நான் என் கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பப்படுகிறேன். என் கணவர் நல்லவர் ஆனால் அவரை எனது மாமியார் மூளை சலவை செய்து என்னிடமிருந்து பிரிக்க பார்க்கிறார். அதற்காக எனது கணவர், அவர் தாயுடன் சேர்ந்து கொண்டு என்னை கொலை செய்யவே துணிந்துவிட்டார்.

அவரை தூண்டி விட்ட எனது மாமியார் சுமதி மீது கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் ஆனால் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.

மேலும் படிக்க