• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எடை குறைந்தது ஆனால் கால் போனது

April 15, 2017 தண்டோரா குழு

உலகின் 5௦௦ கிலோ எடையுடைய பெண்மணிக்கு மும்பை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் உடல் எடை 25௦ கிலோ குறைந்துள்ளது. ஆனால் அவரால் இனி நடக்க முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இமான் அஹ்மத்(36) என்னும் பெண்மணி எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகரை சேர்ந்தவர். அவருடைய உடல் எடை 5௦௦ கிலோவாக இருந்தது. அவரை எகிப்திலிருந்து இந்தியாவின் மும்பை நகரிலுள்ள சைபீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு பிரபல அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் முபாஸல் லக்டாவாலா, மார்ச் 7ம் தேதி அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

“இமானால் எழுந்து உட்கார முடியும். அவருடைய தைராய்டு பிரச்சனை இப்போது சாதாரணமாக இருக்கிறது. அவருக்கு 11வது வயதில் ஏற்பட்ட பக்கவாத தாக்குதலால் அவருடைய கால்கள் செயலற்று போய்விட்டன. மேலும் 25 ஆண்டுகள் படுத்தே இருந்ததால் கால்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இனிமேல் அவரால் நடக்க முடியாது” என்று டாக்டர் முபாஸல் லக்டாவாலா, கூறினார்.

மேலும் அவருக்கு உடல் எடை குறைக்கும் சிகிச்சை முடிந்துவிட்டது. தற்போது நரம்பியல் சம்பந்தமான சிகிச்சை தொடங்கவுள்ளது.நரம்பியல் சிகிச்சைக்காக அவருடைய உடலை சி.டி ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அவருடைய உடல் எடை அதிகமாக இருப்பதால் அந்த ஸ்கேனை செய்ய முடியவில்லை. அதனால் அவருடைய உடல் எடையை 5௦கிலோ குறைக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அவருக்கு மருத்துவர்கள் முன்பு நடத்திய பரிசோதனையில் அவருக்கு அரிய மரபணு கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.நான்கு மாதங்களுக்கு பிறகு இமாமை அவருடைய நாட்டிற்கு அனுப்பலாம் என்று மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவருடைய நரம்பியல் சிகிச்சை முடியும் வரை அவரை மும்பை மருத்துவமையில் வைத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க