• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் “- கே.பி.முனுசாமி

May 2, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“ஓ.பன்னிர்செல்வம் அணி சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் வரவிற்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த பயணத்திற்கான சுற்றுப்பயணம் மே 5-ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். சுற்றுப்பயணத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

இரு அணிகள் இணைய நாங்கள் நிபந்தனை விதிப்பது மக்களின் நன்மைக்காகவே. எங்களின் நிபந்தனையை தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி ஏற்றால் அவர்களுக்கு நல்லது நடக்கும்”.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க