• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உறுப்புக்களை விற்று பணம் சம்பாதிக்கும் ஐஎஸ். தீவிரவாதிகள்.

April 28, 2016 tamil.webdunia.com

ஐஎஸ். தீவிரவாதிகள் தங்கள் பண தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய காயமடைந்துள்ள சக தீவிரவாதிகளைக் கொன்று அவர்களின் உறுப்புக்களை கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதிப்பதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

காயமடைந்த வீரர்களின்(தீவிரவாதிகள்) உடலில் இருந்து உறுப்புக்களை எடுக்க மருத்துவர்கள் எச்சரிப்பதாக அரபு மொழியில் ஈராகில் மோசூலில் இருந்து வெளியாகும் அல்-சபா என்ற செய்தித்தாளில் செய்தி வெளியாகி உள்ளது.

மோசூலின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட தோல்வியால் தீவிரவாதிகள் மிகுந்த பண கஷ்டத்தில் இருப்பதால், காயமடைந்த சக தீவிரவாதிகளை கொன்று அவர்களின் இதயம், கிட்னி போன்றவற்றை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பதாக ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.

மோசூலில் உள்ள ஒரு மருத்துவமனையின் குறிப்பில் 183 உடல்களில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் உள்ளது.

மேலும் படிக்க