• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 16 லட்ச ரூபாய் நிதி திரட்டி உதவி வழங்கிய சக காவலர்கள்..!

September 6, 2021 தண்டோரா குழு

கோவையில் உயிரிழந்த காவலரின்
குடும்பத்திற்கு சக காவலர்கள் 16 லட்சத்து 53 ஆயிரத்து 265 ரூபாய் குடும்ப உதவி நிதியாக வழங்கினர்.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 2002ம் பேட்ஜை சேர்ந்த காவலர்கள் தொடர்ச்சியாக தங்களின் சக காவலர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர்.இந்த நிலையில் 2002-ம் பேட்ஜில் தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்த சிவகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் பணியில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.

இப்படியிருக்க அவரின் பேட்ஜை சேர்ந்த சக காவலர் அவரின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டினர். இப்படி சேகரித்த 16 லட்சத்து 53 ஆயிரத்து 265 ரூபாயை நினைவேந்தல் நடத்தி மறைந்த சிவகுமாரின் மகன் மற்றும் மனைவிக்கு 8 லட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபாயும், தாய் தந்தைக்கு எட்டு லட்சத்து 12 ஆயிரத்து 765 ரூபாய் என பிரித்து வழங்கினர்.

மேலும் படிக்க