• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடல்நலகுறைவால் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட சட்டபேரவை ஊழியர்

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கு கோருவதற்கான சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றபோது, சட்டப் பேரவை ஊழியருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முதல்வர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆரம்பம் முதல் அமளி நடைபெற்றது. வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் திமுகவினரும் வலியுறுத்தினர். ரகசிய வாக்கெடுப்பையும் வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். அதற்கு சட்டப் பேரவைத் தலைவர் தனபால் மறுத்தார்.

இதையடுத்து, பேரவைத் தலைவரின் இருக்கையைச் சுற்றி திமுகவினர் முற்றுகையிட்டனர். அப்போது, அவரது இருக்கையும் மைக்கும் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையில், சட்டப்பேரவை வளாகத்திற்குள் இருந்த ஊழியர் பாலாஜி திடீரென்று உடல்நலக் குறைவுக்கு ஆளானார். அதையடுத்து ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அப்போது, வளாகத்தில் இருந்து சட்டப் பேரவை ஊழியர் பாலாஜியை சக ஊழியர்கள் வெளியே தூக்கி வந்தனர். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனால், சட்டப்பேரவை வாளகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க