• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் மேம்பாலம் கட்டும் பணிக்காக சிஎம்சி காலனி பகுதியில் 40 வீடுகள் இடித்து அகற்றம்

January 24, 2022 தண்டோரா குழு

உக்கடம் – ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 40 வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது.

கோவை உக்கடம்- ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் கட்டுமான பணிக்காக 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதற்காக உக்கடம் சிஎம்சி காலணியில் கட்டப்பட்டிருந்த 157 வீடுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடிக்கப்பட்டது.

2வது கட்டமாக ஆத்துப் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதி செல்வதற்காக இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சி எம்சி காலனி பகுதியில் 100 வீடுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்டது. இதனிடையே இன்று உதவி நகர திட்டமிடல் அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சிஎம்சி காலனி பகுதியில் 40 வீடுகளை இடித்து அகற்றினார்கள்.

இந்த பகுதியில் குடியிருந்தவர்களுக்கு புல்லுகாடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இடிக்கப்பட்ட 40 வீடுகளுக்கு பதிலாக இப்பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க