• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் மீன் மார்க்கெட்டில் 500கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல்

March 5, 2020

கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு ஒரு லட்சம் மதிப்பிலான 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த மீன் விற்பனை மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளில் மீன் வளத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரு லட்சம் மதிப்பிலான 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மீன்களில் தரம் குறித்து ஆய்வு செய்ய மீன்வளத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆய்வின் போது தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மீன் வளத்துறை அதிகாரிகள் உணவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து உக்கடம் மீன் விற்பனை நிலையங்கள் மொத்தம் மற்றும் சில்லறை மீன் மார்க்கெட்டில் மீன்களின் தரம் குறித்தும் பார்மலின் கலந்த ரசாயன மீன்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வில் பார்மலின் கலந்த ரசாயன மீன்கள் இல்லை என தெரியவந்தது மேலும் கெட்டுப்போன நிலையில் ஒரு லட்சம் மதிப்பிலான500 கிலோ மீன்கள் இருந்து கண்டறியப்பட்டது இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க