• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷாவில் ‘27-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு – இந்து, பௌத்த, சீக்கிய, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தினர் பங்கேற்பு

June 24, 2026 தண்டோரா குழு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 27-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (24.06.2026) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

சாதி, மத, இனம், பாலினம் உள்ளிட்ட எந்தப் பேதமும் இன்றி, தியானம் செய்ய விரும்பும் அனைவரும் தியானலிங்க கருவறைக்குள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட முடியும். இதை உணர்த்தும் விதமாக, பல்வேறு மதங்களின் சின்னங்களைத் தாங்கிய ‘சர்வதர்ம ஸ்தம்பம்’ என்ற தூண் தியானலிங்க நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், இதனை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகின்றன.

இந்தாண்டு பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் “ஆஉம் நமசிவாய” மந்திர உச்சாடனத்துடன் தொடங்கின. பின்னர், ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடகம்’ என்ற சக்திவாய்ந்த மந்திர உச்சாடனத்தை பிரம்மச்சாரிகள் பாடினர்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரமவாசிகளின் சூஃபி பாடல்களும், கார்த்திக் ஓதுவார் குழுவினரின் தேவாரப் பதிகங்களும் அர்ப்பணிக்கப்பட்டன. தொடர்ந்து, சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் ‘ருத்ரம் சமகம்’ வேத பாராயணம் நடைபெற்றது. மேலும், ‘அஷ்ரப் அலி.கே’ மற்றும் ‘இஷால் முராத்’ குழுவினரின் இஸ்லாமிய பிரார்த்தனைகளும், சிறப்பு விருந்தினர்களின் புத்த மந்திர உச்சாடனமும் இடம்பெற்றன.

இதனுடன், சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்திப் பாடல்களும், சிறப்பு விருந்தினர்களின் குர்பானி கீர்த்தனைகளும் அர்ப்பணிக்கப்பட்டன. பின்னர், கிரிஸ் கொயர் இசைக்குழுவின் கிறிஸ்தவ பக்திப் பாடல்களும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இறுதியாக, மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற சிறப்பு நாத ஆராதனையுடன் இந்தாண்டு பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் நிறைவுபெற்றன.

ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் மூன்று ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்குப் பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரசவைத்திய முறையில் உருவாக்கப்பட்ட லிங்கங்களில் இதுவே உலகிலேயே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க