• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்லாமியர்களை பற்றி அவதூறாக செய்தி பதிவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளர் கல்யாணராமன் கைது!

February 2, 2019 தண்டோரா குழு

சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களை பற்றி அவதூறாக செய்தி பதிவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளர் கல்யாணராமனை போலீசார் இன்று கைது செய்தனர்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன். பாஜக கட்சியில் இருந்த இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் உள்ளார். சமூக வலைதளங்களில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையாளர்
அலுவலகத்தில் வந்துள்ளது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம் ) போலீசார் கல்யாணராமன் ஃபேஸ்புக்கை பார்த்து புகாரை உறுதி செய்து கொண்டு, கல்யாணராமன் மீது 153ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.

இந்நிலையில், டெல்லியிலிருந்து சென்னை வந்த கல்யாணராமனை விமான நிலையத்தில் வைத்து சென்னை கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க