• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இவ்வளவு சின்ன வயசுலயே நம்மளை விட்டு மறைஞ்சிருக்காங்க – புனித் மறைவிற்கு ரஜினி இரங்கல்

November 10, 2021 தண்டோரா குழு

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46). கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட சினிமா மட்டுமல்லாமல், இந்திய திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.தமிழ் நடிகர்களான சூர்யா, சிவகார்த்தியேன் ஆகியோர் அவர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹூட் செயலியில் பேசி பதிவிட்டுள்ள அவர்

அனைவருக்கும் வணக்கம். எனக்கு சிகிச்சை முடிஞ்சு நல்லா குணமாகிட்டு வர்றேன். நான் ஹாஸ்பிடல்ல இருக்கும்போது புனித் ராஜ்குமார் அகால மரணமடைஞ்சிருக்காங்க. அந்த விஷயத்தை எனக்கு இரண்டு நாள் கழிச்சுதான் சொன்னாங்க. அதைக் கேட்டு நான் ரொம்ப ரொம்ப வேதனைப்பட்டேன். மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த குழந்தை. திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. பேரும் புகழும் உச்சியில இருக்கும்போது, இவ்வளவு சின்ன வயசுலயே நம்மளை விட்டு மறைஞ்சிருக்காங்க. அவருடைய இழப்பு, கன்னட சினிமாவில் ஈடுகட்டவே முடியாது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடையட்டும். நன்றி.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் படிக்க