• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணின் செயினை பறித்த வாலிபர் கைது

February 13, 2018 தண்டோரா குழு

குன்றத்தூரில் இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 10-ம் தேதி சென்னை அருகிலுள்ள குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை என்ற பகுதியில் சாலையில் ஜெயஸ்ரீ என்பவர்நடந்து சென்றுகொண்டிருந்தார்.  அப்போது  இருசக்கரவாகனத்தில் வந்த நபர்கள் அவரின் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதில் நிலை தடுமாறிய ஜெயஸ்ரீ கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த சிவா (வயது 19) மற்றும் அவரது நண்பர் சாலமன் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவாவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள சிவாவின் நண்பர் சாலமனை காவல்துறையினர் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட சிவா மீது இது போன்று பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க