• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு

March 9, 2020 தண்டோரா குழு

இந்து முன்னணி பிரமுகர் கோவையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தை சி.பி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் அலாவுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் தற்போது கோவையில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கணபதி பகுதியில் உள்ள பள்ளி வாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து தலைவர்கள் யார் தாக்கப்பட்டாலும் முஸ்லீம்களை தொடர்பு படுத்துகின்றனர். அவர்கள் முன்விரோதம், தொழிற் போட்டி உள்ளிட்ட காரணங்களால் தாக்கபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்காமல் உடனடியாக இஸ்லாமியர்களை முடிச்சு போடுவது ஏற்புடையதல்ல.

தற்போது இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மாநகர காவல் துறை 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். இருந்த போதிலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ இடம் ஒப்படைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இஸ்லாமிய அமைப்புகள் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி உள்ளிட்ட சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றன. அரசியல் சாசனத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதால் தான் இதற்கு எதிராக போராடி வருகிறோம். இந்த சட்டம் விரைவில் இந்துக்களையும் பாதிக்கும்.கடந்த 1948 சென்சஸ் கணக்கெடுப்புபடி தற்போது கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆந்திரா மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்கள் கடந்த 2010ம் ஆண்டு நடந்த அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த சம்மதித்துள்ளனர். அதேபோல் தமிழக முதலமைச்சரும் ஆவண செய்ய வேண்டும். என்.பி.ஆர் அடிப்படையில் எந்த கணக்கெடுப்பு நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அப்துல்லா பாஷா, கனி, நௌபல் மற்றும் ஜலால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க