• Download mobile app
26 Jul 2025, SaturdayEdition - 3454
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா – இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் புதிய சகாப்தம் படைக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம்: டிவிஎஸ் மோட்டார் பெருமிதம்

July 25, 2025 தண்டோரா குழு

2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர்ஸ்டார் பிரதமரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இருநாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வரவேற்று உள்ளது.வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் வரும் 2030-ம்ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 60 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது பிரதமரின் ‘விக்சித்பாரத்’ என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். இந்த ஒப்பந்தம், குறிப்பாக மத்திய அரசின் முதன்மையான ‘மேக்இன்இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்திய பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் உலக அளவில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

மேலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை பொறுத்தவரை, புகழ்பெற்ற பிரிட்டிஷ் பிராண்டான நார்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை கையகப்படுத்தியதை தொடர்ந்து, இங்கிலாந்தில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத்தயாராகும் சிறப்பான தருணத்தில் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று கூறியுள்ளது.

இது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு கூறுகையில்,

இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மற்றும் வடிவமைப்பின் சக்தியாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கு பார்வை மிக்க ‘விக்சித்பாரத்’ திட்டம் மிகவும் சிறப்பான திட்டம் ஆகும். அந்த திட்டம் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கியமான தருணம் ஆகும். இது இந்திய நிறுவனங்கள் ‘மேக்இன்இந்தியா’ திட்டத்தை உலக அளவில் கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும்.

இந்த நிலையில் தற்போது எங்களின் நார்டன் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்ய இருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தும். இது உலகளாவிய லட்சியங்களை நாங்கள் அடைய, உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளை உற்பத்தி செய்ய எங்களை ஊக்கப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

இந்தியா – இங்கிலாந்து இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு செல்வதோடு, நாட்டின் புதுமை மற்றும் பொறியியல் சிறப்பை வெளிப்படுத்தும் மகத்தான வாய்ப்புகளை உருவாக்கும் என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உறுதியாக நம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க