• Download mobile app
30 Jan 2026, FridayEdition - 3642
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் முதன் முறையாக கோவை கிகானி குளோபல் அகாடமியில் ‘மெட்டாஇன்னோவா’ LMS தளம் அறிமுகம்!

January 30, 2026 தண்டோரா குழு

மெட்டாசேஜ் அலையன்ஸ் (Metasage Alliance) நிறுவனம் பள்ளி மாணவர்களின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள மெட்டாஇன்னோவா (MetaInnova) Learning Management System – LMS’ தளத்தை இன்று பச்சாபாளையம் கிகானி குளோபல் அகாடமி வளாகத்தில் அறிமுகம் செய்தது.

‘மெட்டாஇன்னோவா’ என்பது மெட்டாசேஜ் நிறுவனத்தின் புதிய படைப்பாக உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான LMS (Learning Management System) ஆகும். இது கல்வி நிறுவனங்களுக்கு,குறிப்பாக பள்ளிகளுக்கு தேவையான கற்றல், கற்றலை கண்காணித்தல்,மாணவர்களின் செயல்திறனை அளவிடல் மற்றும் எதிர்காலத்திற்கு தேவையான திறன்களை வளர்த்தல் ஆகிய அனைத்திற்குமான ஒருங்கிணைந்த கல்வி மற்றும் தொழில்நுட்ப தீர்வாக செயல்படுகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான முழுமையான கற்றல் தளமாக ‘மெட்டாஇன்னோவா’ வடிவமைக்கப்பட்டுள்ளது.கணினி அறிவியல், ரோபோடிக்ஸ்,இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), வடிமைப்பு சிந்தனை (Design Thinking) போன்ற துறைகளை ஒருங்கிணைத்த கற்றலை இந்த LMS வழங்குகிறது. வகுப்பறை பாடங்களைத் தாண்டி, நடைமுறை திட்டங்கள், பணிகள் (Assignments), மதிப்பீடுகள், சான்றிதழ்கள் ஆகியவை இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மெட்டாசேஜ் அலையன்ஸ் (Metasage Alliance) மற்றும் கிக்கானி குளோபல் அகாடமி இணைந்து நடத்திய ‘மெட்டா இன்னோவா ஃபியூஷன் 1.0’ (MetaInnova Fusion 1.0) என்ற தொழில்நுட்ப விழா ஜனவரி 28 முதல் 30 வரை பச்சாபாளையம் கிக்கானி குளோபல் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.புதுமை, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முதல் நாளில் சிறப்பு விருந்தினராக டாக்டர் எல்.ரமேஷ்,President IGEN கலந்துகொண்டு,தொழில்நுட்ப அமர்வுக்கு தலைமை தாங்கினார்.வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வியில் புதுமையின் அவசியம் குறித்து அவர் மாணவர்களிடையே உரையாற்றினார். மாணவர்களுக்கான வினாடி வினா, ரோபோக்களின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடு குறித்த போட்டிகள் அவர்களின் கூட்டு கற்றல் திறனை வெளிப்படுத்தின.

இரண்டாவது நாளில் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை மையமாகக் கொண்டு,CurioX ஆய்வகத்தில் ‘ஹேக்கத்தான்'(Hackathon) அமர்வுகள் நடத்தப்பட்டன.இதில் மாணவர்கள் தங்களின் பகுப்பாய்வு சிந்தனை மற்றும் குழுவாகச் செயல்படும் திறனை வெளிப்படுத்தி வியக்க வைத்தனர்.

மூன்றாவது நாள் மற்றும் நிறைவு விழாவின் இறுதி நாளில் ரோபோ வடிவமைப்புப் போட்டிகள் மற்றும் ஹேக்கத்தான் மதிப்பீடுகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ‘MetaInnova LMS’ என்ற புதிய கல்வி மேலாண்மைத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிக்கானி குளோபல் அகாடமி முதல்வர் ஷாலினி நாயர், தாளாளர் துஷார் கிக்கானி, நாஸ்காம் (NASSCOM) இயக்குனர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் வி. உதய சங்கர்,பாரடே ஓசோன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன் கூடலிங்கம், மெட்டாசேஜ் மேலாண்மை இயக்குனர்கள் ஜெயக்குமார் வெள்ளையன்,அனுஷ் ஜெயக்குமார், ஆகாஷ் ஜெயக்குமார் மற்றும் முதன்மை செயல் தலைவர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தவும், தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடி தொழில்நுட்பப் பயன்பாடுகளைக் கற்றுக்கொள்ளவும் ‘மெட்டா இன்னோவா – ஃபியூஷன் 1.0’ ஒரு சிறந்த தளமாக அமைந்தது என விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தியாவின் முதல் பள்ளி மையப்படுத்தப்பட்ட புதுமையான LMS என குறிப்பிடப்படும் இந்த ‘மேட்டா இன்னோவா’ தளம், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் எதிர்கால திறன்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த LMS தளம், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,மெட்டாசேஜ் அலையன்ஸ் (Metasage Alliance) நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது தளத்தை டெல்லியில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க