• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு

May 12, 2025

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காணும் விதமாக முக்கிய சாலை சந்திப்புகளில் தீவுத்திடல்கள் மற்றும் ரவுண்டானாக்கள், அமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில்,மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில்,தொடர்ந்து புதிய திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் குறிப்பாக, கல்வி, அறிவியல்,தமிழர் பாரம்பரியம் உள்ளிட்ட தகவல்களை கூறும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளான,ரேஸ்கோர்ஸ்,சுங்கம் ரவுண்டானா,வடகோவை,போன்ற பகுதிகளில் வேண்கல சிலைகளை தனியார் பங்களிப்புடன் ஃப்ளாக் ஷிப் நிறுவனத்தினர் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில்,உக்கடம் பேருந்து நிலையம் அருகே சுங்கம் திரும்பும் வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட ரவுண்டானா மையப்பகுதியில் அசோக சக்கரத்துடன் சிங்க முகங்களுடன் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட அசோக சக்கர துாண் நிறுவப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் அசோக சக்கர தூணை திறந்து வைத்தார்.

இது குறித்து சிலை வடிவமைப்பாளர் சதீஷ் கூறுகையில்,

இந்தியாவிலேயே முதன் முறையாக அசோகச் சக்கரம் சிங்கம் தலை கொண்ட கம்பீரமான சிலை கோவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகச் சக்கர சிங்கம் சிலை கோவையில் திறக்கப்பட்டுள்ளது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

சிலை அமைக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள இரு துாண்களில், திருவள்ளுவர், செங்கோட்டை வரையப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க