• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே முதன் முறையாக சித்த மருத்துவக்கல்லூரியில் திருநங்கைக்கு சீட் !

November 27, 2017 தண்டோரா குழு

திருநங்கை தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ படிப்பில் இடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உலக் குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாரிகா பானு. இவர், உலக் குடி, சவலப்பேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 2015-16ம் ஆண்டில் பிளஸ் 1 படித்து, தேர்ச்சி பெற்றார். தாரிகாபானு திருநங்கை என்பதால் பல பள்ளிகள் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தன. இதனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பத்தூர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 அறிவியல்
பாடப்பிரிவில் சேர்ந்தார்.

இதைத்தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை தாரிகா பானு, தமிழில் 96, ஆங்கிலத்தில் 79, இயற்பியலில் 107, வேதியியலில் 88, தாவரவியலில் 86, விலங்கியலில் 89 என 537 மதிப் பெண்கள் பெற்றார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மருத்துவம் சேர்ந்து படிக்கவே தான் விரும்புவதாகவும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி மருத்துவம் படிக்க உதவ வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

சித்த மருத்துவ படிப்பிற்கு தேவையான மதிப்பெண் இருந்தும் திருநங்கை என்ற மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரே காரணத்தால் மெடிக்கல் சீட் தர மறுத்ததை அடுத்து தாரிகாபானு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது, தாரிகாபானுவுக்கு அவர் விரும்பிய சித்த மருத்துவக்கல்லூரியில் சீட் வழங்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும், மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை தாரிகாபானு பெறுகிறார்.

மேலும் படிக்க