• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தாண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு எவ்வளவு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

July 13, 2017 தண்டோரா குழு

இந்தாண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு எவ்வளவு நிர்ணயித்துள்ளீர் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் தொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு விசாரித்தது. அப்போது, டாஸ்மாக் கடைகள் மூலம் இந்தாண்டு தீபாவளிக்கு எவ்வளவு மதுவிற்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும்,டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகவே போராட்டம் நடத்துகின்றனர் என்று நீதிபதிகள் கூறினர். மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தை யாரோ தூண்டி விடுவதாக கூறுவதை ஏற்க முடியாது.

இப்போது டாஸ்மாக் கடையை மூடினால் அடுத்த 2 தலைமுறைக்கு பிறகு வருபவர்களை காக்க முடியும் என்றும் 2 தலைமுறைகளை அழிக்கும் டாஸ்மாக் விஷம் போல் பரவியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க