• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இத்தாலியில் 7.15 மீட்டர் நீளத்துக்கு பீட்சா செய்து கின்னஸ் சாதனை !

May 24, 2018 தண்டோரா குழு

இத்தாலியில் 7.15 மீட்டர் நீளத்துக்கு பீட்சா செய்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

பெரியவர் முதல் சிறியவர் வரை பீட்சா விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டு பிரியர்களையும் சுண்டி இழுக்கும் வகையில் பீட்சாவின் சுவை இருக்கும்.பீட்சா ஒரு இத்தாலிய உணவாகும். இத்தாலிய உணவு பிரியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பீட்சாதான்.

இத்தாலியின் நேப்லஸ் (Naples) என்ற நகரில் சமையல் கலைஞர்கள் இணைந்து 7.15 மீட்டர் நீளத்துக்கு மிக பிரம்மாண்டமான பீட்சா செய்து அசத்தியுள்ளனர். 83 கிலோ மாவு, 50 கிலோ உறை பாலேடு 7 கிலோ தக்காளிச்சாறு உள்ளிட்டவற்றை சமையல் கலைஞர்கள் பயன்படுத்தி இந்த பீட்சாவை செய்து உள்ளனர்.

மேலும், இந்த பீட்சாவை உணவு விடுதிகளில் பயன்படுத்தும் 3 மிகப்பெரிய ஓவன்களைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.கன்வேயர் பெல்ட் மூலம் பீட்சாவுக்குத் தேவையான மாவை பரப்பி ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கும் ஓவன்களை இடம் மாற்றி சமைத்து இத்தாலி சமையல் கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர். தற்போது இந்த பீட்சா கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க