• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 4 பகுதிகளுக்கு உதவி ஆணையர்கள் நியமனம்

April 3, 2017 தண்டோரா குழு

ஆர்.கே தொகுதிக்கு உட்பட்ட 4 உதவி ஆணையர்களை இன்றுகாலைமாற்றி காவல்துறை தலைவர் ராஜேந்திரன் இடமாற்றம் செய்தார். இந்த நிலையில் மாற்றப்பட்ட உதவி ஆணையர்களுக்கு பதிலாக உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடைபெற வுள்ளது. இதையடுத்து பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தரமணி உதவி ஆணையராக உள்ள சுப்புராயன் எம்.கே.பி நகர உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாநகர் உதவி ஆணையராக இருந்த சந்திரசேகர் ராயபுரம் பகுதி உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துறைமுகம் பகுதி உதவி ஆணையராக உள்ள அர்னால்டு ஈஸ்வரன் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்லாவரம் பகுதி உதவி ஆணையராக உள்ள விமலன் திருவொற்றியூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க