• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்கள் இன்று விடுதலை

October 16, 2017 தண்டோரா குழு

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து அவரது பெற்றோர்கள் இன்று சிறையிலிருந்து வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில்,ராஜேஷ் – நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது ஆருஷியும், வேலைக்காரர் ஹேம்ராஜும் (45) மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், அவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கருதி, ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் இருவரும் அவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இதனையடுத்து நடந்த சிபிஐ விசாரணையில், இந்த கொலையை தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் தல்வார் செய்தனர் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு, அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் – நூபுர் தல்வார் மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீடு வழக்கில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டது.இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் நிரபராதிகள் எனவும், அவர்கள் கொலை செய்யவில்லை எனக்கூறி, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் பேரில் இன்று ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் ஆகியோர் சிறையிலிருந்து இன்று வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க