தமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைத்து விட்டு ஜெயலலிதா மரணத்தில் இருந்து தற்போது நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் வரை சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கே இன்னும் விடிவு ஏற்படாத நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மர்ம மரணங்கள் ஏற்பட்டு மக்களை பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கி வருகிறது.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, மற்றொரு காவலாளி படுகாயம், ஜெயலலிதாவின் அறையிலேயே புகுந்து கொள்ளை, டிரைவர் கனகராஜ் விபத்தில் பலி என இதுபோன்ற செய்திகள் பொதுமக்கள் நம்ப கூடியதாக இல்லை. இரும்பு கோட்டை போன்று உள்ள கொடநாடு எஸ்டேட்டில் இச்சம்பவங்கள் தற்செயலாக நடந்ததாக கருத முடியாது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னால் சசிகலா பினாமி முதல்வர்கள் ஒ.பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆட்சி ஒன்று நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மர்ம மரண சம்பவங்களுக்கு பின்னால் சதி இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.
எனவே, தமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைத்து விட்டு ஜெயலலிதா மரணத்தில் இருந்து தற்போது நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் வரை சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக அமைச்சர்களையும் , கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.க்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்.அப்போது தான் முழு உண்மை தெரியவரும்.
இது போன்ற சம்பவங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று உடனே அமைச்சரவையை கலைக்க பரிந்துரை செய்து விட்டு தானும் பதவி விலக வேண்டும் என்பதே உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம்.”
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது