• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

96 வயதில் பட்டம் பெற்ற மாணவர்

May 18, 2016 தண்டோரா குழு.

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவர் ஒருவருக்கு சுமார் 60 ஆண்டுகள் கழித்து டிப்ளோமா பட்டம் கொடுக்கப்பட்டது.

அல்போன்சோ கோன்ஜாலேஸ்(96), கடந்த வாரம் அவருக்கு விலங்கியல் பட்டம் கொடுக்கப்பட்டது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் பழமையான மாணவன் என்னும் பெருமை அவரையே சேரும்.

கடந்த 1953-ம் ஆண்டு இந்த இரண்டாம் உலகப்போர் வீரரான இவர் தனது பணியின் காரணமாக பல்கலைக்கழகத்தில் உள்ள தன்னுடைய பாடப் பயிற்சி முடித்து, தான் பட்டம் பெற்று விட்டதாகத் தவறுதலாக நினைத்து விட்டார்.

இந்நிலையில் சுமார் அறுபது ஆண்டுகள் கழித்து அவருடைய சான்றிதழை பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள அவருடைய உறவினர்கள் அங்குச் சென்ற போது, அவர் ஒரு பாடத்தை முடிக்கத் தவறியது தெரியவந்தது.

இதையடுத்து தற்போது விலங்கியல் பாடத்தை ஒரு முக்கிய பாடமாக அந்தக் கல்லூரியில் பயில இயலாத காரணத்தால் வயது முதியோருக்கான விசேஷ பள்ளியில் சேர்ந்து, வாசிப்பு, காணொளி மூலம் படித்தல், மற்ற வகுப்புகளைக் கவனிப்பது என பல்வேறு வேலைகள் மூலம் படிக்கலானார். இதையடுத்து பரிட்சையில் பாஸ்ஆனதால் இவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருடைய வாழ்க்கையைக் குறித்த எழுது ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்துள்ளனர்.

அவருடைய ஆர்வத்தைக் கண்ட அந்தப் பள்ளியின் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். அதே போல் தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் கூறும்போது, கோன்ஜாலேஸ் அற்புதமான உத்வேகம் கொண்டவர் என்று பாராட்டினர்.
எனவே படித்து பட்டம் வாங்க எந்த ஒரு காலக் கெடுவும் கிடையாது எனவும். நாம் நினைத்தால் எந்த வயதிலும் படித்து பட்டம் பெறலாம் எனவும் அவர் நிரூபித்துள்ளார்.

மேலும் படிக்க