• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறிவுரை கூறியதால் அப்பாவின் நண்பரை கொன்ற இளைஞர்!

December 15, 2017 தண்டோரா குழு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறிய அப்பாவின் நண்பரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அப்பட்டுவிளையை சேர்ந்த குமார். இவரது மகன் சந்தோஷ், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ் அடிக்கடி கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை அறிந்த தந்தை குமார், அவரது நண்பரான நவ்ஷாத் என்பவரிடம் விபரத்தை கூறியுள்ளார்.

இதனால் நண்பருக்கு உதவும் நோக்கில் நவ்ஷாத், வீட்டிலிருந்த சந்தோஷை நேற்று நள்ளிரவு சந்தித்து கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியதாக தெரிகிறது. அப்போது ஆவேசமடைந்த சந்தோஷ், வீட்டிலிருந்த கத்தியால் நவ்ஷாத்தை குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டின் அருகே இருக்கும் கட்டடத்தின் மாடியில் மறைந்துகொண்டார்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் சந்தோஷை கைது செய்தனர். அறிவுரை கூறியதால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க