• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறிவியல் ரீதியாகவும் கோவை சிறப்புமிக்கதாக மாறியுள்ளது – நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

February 28, 2023 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு வளாகத்தில் ‘எக்ஸ்பிரிமெண்டா’ என்ற அறிவியல் மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகள் மற்றும் பெரியோர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி பயிற்சியாகவும், பொழுது போக்காகவும் எளிமையாக கற்றுக்கொள்ள வைப்பதே இம்மையத்தின் நோக்கம்.

‘எக்ஸ்பிரிமெண்டா’ அறிவியல் மையத்தை, இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். விழாவில், கவுரவ விருந்தினராக சென்னை, ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர் பங்கேற்றார்.மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆகியோரும் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாராஜன் பேசியதாவது:

கோவையை சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டி இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தார். கோவைக்கு பெருமையான நிகழ்வு இது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதான உற்பத்தி, நிர்வாக திறன் போன்றவைகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன. அறிவியல் ரீதியாகவும் தமிழகம் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழக முதல்வரின் நான் முதல்வன் என்கிற மாணவர்களுக்கான திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவை எப்போதுமே தனி சிறப்பு கொண்டது.

தொழில்ரீதியான முன்னேற்றம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழிற்நிறுவனங்களின் தேவைகள் அனைத்தும் நிறைந்த இடம் என கோவைக்கு பல சிறப்புகள் உள்ளன. தற்போது அறிவியல் ரீதியாகவும் கோவை சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. ‘எக்ஸ்பிரிமெண்டா’ அறிவியல் மையம் மூலம் மாணவர்களின் அறிவியல் திறன் மேம்படும். அறிவியல் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். வருங்காலங்களில் அறிவியல் வளர்ச்சி இம்மையம் புதிய உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

40 ஆயிரம் சதுர அடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் மையத்தில் 120 க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க