• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் ரயில் விபத்து, 1௦௦ காயம்

January 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் புதன்கிழமை நடந்த ரயில் விபத்தில் 1௦௦ பேர் காயமடைந்தனர். நல்லகாலமாக உயிர்ச் சேதம் ஏதுமில்லை.

அமெரிக்கா, லாங் ஐலண்ட் ரயில் ரோடு என்னும் இடத்திலிருந்து கிளம்பிய ரயில் நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனை மீது மோதியதில் அங்கு இருந்த 1௦௦ காயமடைந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த விபத்தில் ரயில் தண்டவாளம் அதிகமாகச் சேதமடைந்துள்ளது” என்றார்.

நியூயார்க் நகர் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ கூறுகையில், “ரயில் மெதுவாக சென்றுள்ளது. இச்சம்பத்தில் ரயில் தடம்புரண்டவில்லை” என்றார்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 11 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய ரயில் வண்டியில் 6௦௦ முதல் 7௦௦ பேர் பயணம் செய்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வண்டியிலிருந்து கீழே இறங்க பலர் நின்று கொண்டிருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து நியூயார்க் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க