• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு

May 12, 2017 தண்டோரா குழு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றசாட்டுகள் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

அண்மையில் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது என பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனையடுத்து மின்னணு இயந்திரம் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் நடந்தும் இக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுக அம்மா அணி சார்பில் தம்பிதுரை, தளவாய் சுந்தரம், வேணுகோபால் எம்.பி.ஆகியோர் பங்கேற்கின்றனர். அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் இருந்து திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.

மேலும் படிக்க