• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

February 14, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கட்டாயம் குறிப்பாக பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜிக்கு எதிரான பெண் எஸ்.பியின் பாலியல் புகார் குறித்த வழக்கில் அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீது பெண் எஸ்.பி புகார் அளித்தன் பேரில், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி. முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி கமிட்டி விசாரணையை தொடரலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறினார்.

மேலும், “தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்” என்று தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது அறையிலும் இரு வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க