• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம்

January 8, 2019 தண்டோரா குழு

அகில இந்திய மகிளா காங்., தேசிய பொதுச்செயலாளராக சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டார்.

சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டு தேசிய அளவில் புகழ் பெற்றவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின் அதிமுக நிகழ்சிகளில் கலந்து கொண்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், அப்ஸரா ரெட்டி அதிமுகவில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். மேலும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார்.

மேலும் படிக்க