• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

July 18, 2025 தண்டோரா குழு

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கோவை போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.இதில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த கொடூர சம்பவம், சீர நாயக்கன் பாளையம், ஐஸ்வர்யா நகர் பகுதியில் 2019 ம் ஆண்டு நடைபெற்றது.பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவியை ஏழு பேர் இணைந்து கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர்.இது தொடர்பாக போலீசார் மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணை முடிவில், நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். அதில்,பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த தீர்ப்பு, சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் கண்டிப்பான நடவடிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது.

மேலும் படிக்க