• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனதில் தவறு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை உறுதி டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் அறிக்கை

April 14, 2026 தண்டோரா குழு

நாசிக்கில் உள்ள எங்கள் நிறுவனத்தில் இருந்து வரும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் மிகவும் கவலையும் வேதனையும் அளிப்பதாக உள்ளன என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தச் சம்பவம் மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதோடு, குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,தற்போது நடந்து வரும் விசாரணைகளுக்கு நிறுவனம் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. ஊழியர்களின் எந்தவொரு வற்புறுத்தலுக்கும் அல்லது தவறான நடத்தைக்கும் டாடா குழுமம் சிறிதும் இடம் கொடுக்காது.

உண்மைகளைக் கண்டறியவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான அனைவரையும் அடையாளம் காணவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆர்த்தி சுப்பிரமணியன் இந்த விசாரணையைத் தலைமை தாங்கி நடத்துவார்.குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்கள் மீது தகுந்த மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவையான நடைமுறை மாற்றங்கள் அல்லது திருத்த நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு அவை, கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க