• Download mobile app
12 Jun 2026, FridayEdition - 3775
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகைக்கு எது முக்கியம்? நிக்கி கல்ராணி.

May 7, 2016 tamil.webdunia.com

நடிகையின் ஆதாரமும், மூலதனமும் அழகு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால், அதைவிட முக்கியமான வேறு சிலவும் இருக்கிறது என்றார் நிக்கி கல்ராணி.

கோ 2 படம் குறித்து பேசியவர், “தேர்தல் நெருங்கி வரும் இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் அரசியலையும் ஊடகத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கோ 2 திரைப்படம் நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்” என்றார்.

கோ 2 படத்தில் நிக்கி கல்ராணிக்கு பத்திரிகையாளர் வேடம். அது பற்றி கேட்ட போது தான், நடிகைக்கு அழகைவிட அதி முக்கியமாகத் தேவைப்படும் விஷயம் குறித்து பேசினார்.

இந்தப் படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கும் நான், அந்த கதாப்பாத்திரம் தத்ரூபமாக அமையப் பல நிஜ பத்திரிகையாளர்களை பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும் விதம், அவர்கள் எப்படி மைக்கை பிடிக்கிறார்கள் என்பது முதல் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய உழைப்பிற்கு ஏற்றப் பலனை மக்களிடத்தில் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அழகு மட்டுமே ஒரு நடிகைக்கு ஆதாரமாய் இருக்க முடியாது. உழைப்பும் திறமையும் மிக மிக முக்கியம்” என்றார்.

மேலும் படிக்க