• Download mobile app
19 May 2026, TuesdayEdition - 3751
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெற புதிய மொபைல் ஆப் அறிமுகம்

March 21, 2017 தண்டோரா குழு

‘ஆதார்’ எண் அடிப்படையில் சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெற விரைவில் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

உலகம் முழுவதும் டிஜிட்டல் மையமாகி வருவதால் ஸ்மார்ட் போன் அசூர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால், டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் இந்தியாவில் மக்களின் பணிகளை எளிமையாக்க புதிதாக பல்வேறு மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யபட்டு வருகிறது. அந்த வகையில், வருமான வரி செலுத்துவது, வருமான வரி கணக்கு விபரங்களை சரி பார்ப்பது போன்றவற்றுக்காகவும், விரைவில் புதிய, ‘மொபைல் ஆப்’ அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஆதார் எண்ணை பயன்படுத்தி, புதிய பான் கார்டை, இந்த ஆப் மூலம், சில நிமிடங்களிலேயே பெறும் வாய்ப்பும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் , நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், இந்த, ‘ஆப்’ அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க