• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை !

June 30, 2020 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் தொண்டர்களை ஒன்று திரட்டி சந்திப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கலெக்டர் ராசாமணி அறிக்கையில் கூறியிருப்பது,

அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தொண்டர்களையும் பொதுமக்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.இதனால் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இச்சூழல் கோவையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலிலும் ஊரடங்கு முழுமையாக அகற்றப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் பிற அமைப்புகள் இயக்கப் பிரதிநிதிகள் தொண்டர்களை சந்திப்பது பொதுமக்களை திரட்டி ஓரிடத்தில் கூட்டுவது தவிர்த்துவிட வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க