July 18, 2025
தண்டோரா குழு
கோவை பிஎஸ்ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றத்தின் தொடக்க விழா இன்று (18-ந் தேதி ) கல்லூரியின் முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது.
விழா இறைவணக்கத்துடன் துவங்கியது. விழாவில் கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதைத் தொடர்ந்து, மாணவர் மன்றத்தின் ஆண்டு செயல்பாடுகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சி தலைவர் சங்கீத் பல்வந்த் வாகே கேப்ஜெமினி நிறுவன மூத்த இயக்குனர் கார்த்திகேயன், டாக்டர் நந்தினி, முதல்வர் ஆரதி மற்றும்
மாணவர் மன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர்கள்.
விழாவில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) கூடுதல் ஆட்சியர் சங்கீத் பல்வந்த் வாகே பேசும்போது கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் கல்வி மிக முக்கியம். கல்வி கற்கும் மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம்,மன உறுதி,திறன் வளர்த்தல் போன்ற இந்த மூன்றும் முக்கியம்.மாணவர்கள் கல்வி கற்கும் போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் காண முடியும்.மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து விழாவில்
ஆர்.கார்த்திகேயன்,(மூத்த இயக்குநர் மற்றும் மையத் தலைவர்.கேப்ஜெமினி, கோயம்புத்தூர்) சிறப்புரை ஆற்றினார்
அவர்களின் பேச்சு மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருந்தது.மாணவர் திறனின் முக்கியத்துவம், தலைமைத்துவம் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
விழா முடிவில் மாணவர் மன்றத் தலைவர் ஐகோ ஜாய்சன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்வு தேசிய கீதத்துடன் இனிதே நிறைவடைந்தது.