• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளோம் – எஸ். பி. வேலுமணி

October 5, 2019

கோவை புலியகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று 894 பயனாளிகளுக்கு 3.71 கோடி மதிப்புடைய நலத்தலதிட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு குறை தீர்க்கும் முகாமினை துவக்கி வைத்து பின்னர் பேசிய அமைச்சர் எஸ். பி.வேலுமணி,

இந்த திட்டத்தை பயன்படுத்தி மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
மனு வாங்கத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. இது போன்ற கூட்டங்களில் ஏதாவது ஒரு பிட்டை போட்டு கோரிக்கையை வைப்பது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூன்னின் வழக்கம் என தெரிவித்தார்.கோவை தெற்கு தொகுதியில் மகளிர் கல்லூரியை கொண்டு வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார் எனவும் முதல்வரிடம் இந்த கோரிக்கையை அவர் வைத்திருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே 4 கல்லூரியை பெற்றுக் கொடுத்து இருக்கின்றோம். கோவை நகரில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, பாலங்கள் வேலை வேகமாக நடந்து வருகின்றது. அவினாசி சாலையில் 9.5 கி.மீ தூரதரதிற்கு பாலம் அமைக்கப்பட இருக்கின்றது. தமிழகத்தில் இது போன்ற பாலம் எங்கும் இல்லை என தெரிவித்த அவர் தாய்லாந்து, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பதை போல இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளோம் என தெரிவித்த அவர் , மக்களின் பொழுது போக்கிற்காக உக்கடம் குளம் மெரீனா பீச் போல மாற்றப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அனைத்து திட்டங்களும் இங்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் வேலுமணி அதிகாரிகளிடம் அவற்றிக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தினார்..

கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே 4 கல்லூரியை பெற்றுக் கொடுத்து இருக்கின்றோம் என தெரிவித்த அவர், கோவை நகரில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, பாலங்கள் வேலை வேகமாக நடந்து வருகின்றது எனவும் ,அவினாசி சாலையில் 9.5 கி.மீ தூரதரதிற்கு பாலம் அமைக்கப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் இது போன்ற பாலம் எங்கும் இல்லை என தெரிவித்த அவர் தாய்லாந்து, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பதை போல இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளோம் என தெரிவித்த அவர் , மக்களின் பொழுது போக்கிற்காக உக்கடம் குளம் மெரீனா பீச் போல மாற்றப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அனைத்து திட்டங்களும் இங்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் வேலுமணி அதிகாரிகளிடம் அவற்றிக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க