• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான பன்னீர் பாயாசம்

May 16, 2018 tamil.samayam.com

தேவையான பொருட்கள்:

பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)
பால் – இரண்டு கப்
கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்
குங்குமப்பூ – சிறிதளவு
சோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
முந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.

பின்,சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.

மேலும் படிக்க