• Download mobile app
31 Dec 2025, WednesdayEdition - 3612
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பனை ஓலை கொழுக்கட்டை…!

December 5, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – முக்கால் கிலோ
கருப்பட்டி – அரை கிலோ
ஏலக்காய் – 8
தேங்காய் – ஒரு மூடி துருவியது
பனை ஓலை – 10 ஓலைகள்

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். கடாயை காயவைத்து துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை போடவும்.

கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். பின் இறக்கி வடிகட்டி மாவுடன் பிசையவும். ஓலையை அரை அடி நீளத்திற்கு நறுக்கி பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து இட்டித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

மேலும் படிக்க