• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவையான வெஜிடபிள் பிரியாணி செய்ய…!!

September 3, 2019 https://tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

அரிசி – 4 கப்
வெங்காயம் – 10
உருளைக்கிழங்கு – 8
காரட் – 12
பச்சைப் பட்டாணி – 2 கப்
காலிஃபிளவர் – ஒன்று (சிறியது)
நெய் – 2 கப்
எலுமிச்சம் பழம் – 2
ஜாதிபத்திரி – 4 இலைகள்
இஞ்சி – 2 அங்குலம்
தேங்காய்த் துருவல் – அரை தேங்காய்
பச்சை மிளகாய் – 4
பூண்டு பற்கள் – 12
பட்டை – 4 அங்குலம்
கிராம்பு – 8
ஏலக்காய் – 8
கசகசா – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானது

செய்முறை:

அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு சூடேறியதும் அதில் அரிசியைப் போட்டு வறுத்து, எட்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

உப்பு கலந்த நீரில், உருளைக் கிழங்கு, பட்டாணி, காரட், காலிஃபிளவர் ஆகியவற்றை வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது நெய் விட்டுஅடுப்பிலேற்றி அதில் வெங்காயத் துண்டுகளையும், ஜாதிபத்திரியையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதோடு இஞ்சி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிமசால் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா சிறிது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பிறகு வேகவைத்துள்ள காய்கறிகள் வெந்த நீர் எல்லாம் சேர்த்து கிளறவும். நீர் அம்சம் எல்லாம் சுண்டியதும் அடுப்பை விட்டு இறக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய்யைவிட்டு அதில் வெந்த சாதம், வெஜிடபிள் மசாலாக்கள் எல்லாம் ஒன்று கலந்து நன்கு கிளறி எடுத்துக் கொள்ளவும்.சுவையான வெஜிடபுள் பிரியாணி தயார்.

மேலும் படிக்க