• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுலபமான பேல் பூரி செய்ய…!

February 20, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பொரி – 2 கப்
ஓமப்பொடி – 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 4 ஸ்பூன்
வேர்க்கடலை – 4 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
உருளைக்கிழங்கு – 2
புதினா சட்னி – தேவையான அளவு
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
லெமன் சாறு – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
சாட் மசாலா – கால் ஸ்பூன்
சீரகப் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அத்துடன், ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய்த் தூள், சாட் மசாலா, சீரகத் தூள் என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, கடைசியாக எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சுவையான பேல் பூரி தயார்.

மேலும் படிக்க