• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறால் பொடி

October 4, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

இறால் கருவாடு – 250 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
சின்ன வெங்காயம் – 7
பூண்டு – 8 பல்
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 200 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும். அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும்.

இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

மேலும் படிக்க