• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவல் போண்டா செய்ய…!

July 30, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

அவல் – ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
கடலை மாவு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக)
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
சாட் மசாலா – ஒரு ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2/ லிட்டர்
செய்முறை:

அவல் போண்டா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அவல் சேர்க்கவும். பின்பு அவற்றில் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து விடவும். பின்பு நறுக்கிவைத்துள்ள இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்.

பிறகு அவற்றில் 1/2 கப் கடலை மாவு, ஒரு ஸ்பூன் சாட் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். அதன் பிறகு சிறு சிறு உருண்டைகளாக செய்து, ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் அவற்றில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சூடான சுவையான அவல் போண்டா தயார்.

மேலும் படிக்க