• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ராந்த் படத்துக்கு வசனம் எழுதிய விஜய் சேதுபதி !

October 26, 2018 தண்டோரா குழு

சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ராந்த் ராம்பிரகாஷ் ராயப்பாவின் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’,செல்வசேகரனின் ‘வெண்ணிலா கபடிகுழு 2′ மற்றும் ஜெகதீசனின் ‘பக்ரீத்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க விக்ராந்த் கமிட்டாகியுள்ளார்.2015-ம் ஆண்டு விக்ராந்த் ஹீரோவாக நடித்து வெளியான படம் ‘தாக்க தாக்க’.இப்படத்தை விக்ராந்தின் சகோதரரான சஞ்ஜீவ் இயக்கியிருந்தார்.இவர்,மறுபடியும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து இன்னொரு படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்திற்கு வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.

“விஜய் சேதுபதியைச் சந்தித்த போது,கதையின் சுருக்கத்தைச் சொன்னேன்.அதைக் கேட்டதும்,‘நன்றாக இருக்கிறது. இந்தக் கதை விக்ராந்துக்குப் பொருத்தமாக இருக்கும்’என்றவர்,‘இந்தப் படத்துக்கு நான் வசனம் எழுதவா?’என்று கேட்டார்.அவருடைய பிஸி ஷெட்யூலில் இதெல்லாம் சாத்தியப்படுமா? என்று யோசித்தபோது,‘கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம்’என்று விஜய் சேதுபதி சொன்னார்.

அதேபோல்,அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் முடிந்த பிறகு,இரவு நேரங்களில் என்னுடன் இருந்து திரைக்கதையை மெருகேற்றியதோடு,வசனங்களையும் எழுதினார்.இதை விக்ராந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங்கை நவம்பர் மாதம் இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.வெகுவிரைவில் இதுகுறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் சேதுபதி தயாரித்து,நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு அவர்தான் வசனம் எழுதினார்.தற்போது தான் நடிக்காத படத்துக்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க