• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் ?

September 6, 2018 தண்டோரா குழு

கடந்த 2015ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி,நயன்தாரா,அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’.ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும்,மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும்,நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர்.இந்தப் படத்திலும் ஜெயம் ரவி போலீசாக நடிக்கவுள்ளார்.தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.மற்றொரு நாயகியாக சாயிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.அந்த வகையில், இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க