• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீணையில் 67 பாடலை இசைத்து விஜயலட்சுமி உலக சாதனை

March 6, 2017 tamilsamayam.com

இசைக்கச்சேரியில் வீணையில் 67 பாடல்களை இடைவிடாது இசைத்து உலக சாதனை படைத்துள்ளார் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.

பார்வை திறனற்ற மாற்று திறனாளியானக இருந்தாலும் இறைவனால் அளிக்கப்பட்ட அதீத திறமையால் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பல சாதனைகள் படைத்து வருகின்றார்.

இந்த வகையில் நேற்று கொச்சியில் நடந்த இசை நிகழ்ச்சியில், வீணையில் பாடலை இசைத்த வைக்கம் விஜயலட்சுமி, 67 பாடல்களை இடைவிடாது தொடர்ந்து இசைத்து அசத்தினார். இதற்கு முன் நடந்த ஒரு இசைக்கச்சேரியில் பார்வை திறனற்ற மாற்றுதிறனாளி ஒருவர் 51 பாடல்களை, ஒரே அமர்வில் வீணையில் இசைத்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் ஒரே அமர்வில் 67 பாடலை வீணையில் இசைத்து சாதனை படைத்துள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. இவரின் சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க