• Download mobile app
21 May 2026, ThursdayEdition - 3753
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுசித்ராவை கடுமையாக விமர்சித்துள்ள சின்மயி..!

March 4, 2017 tamil.samayam.com

தன்னை பற்றிய அவதூறுகளை பதிவிட்டதற்காக பாடகி சுசித்ராவை,சக பாடகியான சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் வெளியாகி வரும் டிவீட்கள்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.இந்த டிவீட்களில் பாடகி சின்மயி குறித்தும் தகவல் வெளியாகியிருந்தது.இந்நிலையில் தன்னை பற்றிய தவறான கருத்துகளை பரப்பியதற்காக சுசித்ராவை சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில்,”நானும் என் கணவரும், கார்த்திக் குமாரிடம் பேசினோம்.சுசித்ராவுக்கு உடல் நலம் சரியில்லை என கார்த்திக் குமார் சொல்லும் போதே,என்ன சூழல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான சூழல் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆனால் என்னை பற்றி அவர் கூறியிருப்பது எல்லாம் முற்றிலும் தவறு.(ஆனால் ஏன் என்னை அவர் பிளாக் செய்து வைத்திருக்கிறார் என தெரியவில்லை.)நான் நேர்மையாக இருக்கிறேன்.நான் யாரை நினைத்தும் பயப்படத் தேவையில்லை.”என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க