• Download mobile app
13 May 2026, WednesdayEdition - 3745
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்!

November 1, 2018 தண்டோரா குழு

AAA படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வந்த சிம்புவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் – த்ரிவிக்ரம் கூட்டணியில் 2013-ல் வெளியான ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ படத்தின் ரீமேக்காகும்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.சமீபத்தில் ஜார்ஜியாவில் பாடல் காட்சியுடன் தொடங்கப்பட்ட ஷூட்டிங்,தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சிம்புவின் நண்பரான மஹத்தும் நடித்து வருகிறார்.இந்நிலையில்,தீபாவளியன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகவுள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க