• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜு காலமானார்

September 17, 2018 தண்டோரா குழு

பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜு உடல்நலக்குறைவால் கொச்சியில் இன்று உயிரிழந்தார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கேப்டன் ராஜு(68).மலையாளத்தில் சிஐடி மூஸா,ஒரு வடக்கன் வீரகத்த போன்ற படங்கள் கேப்டன் ராஜுவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.கேப்டன் ராஜு மலையாளம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக மாஸ்டர் பீஸ் என்ற மலையாள படத்தில் நடித்தார்.

இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக விமானத்தில் அமெரிக்கா சென்றுக்கொண்டிருந்தபோது,கேப்டன் ராஜுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதனையடுத்து விமானம் ஓமன் நாட்டில் தரையிறக்கப்பட்டு,அவர் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில்,இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.அவரது மறைவிற்கு மலையாள திரையுலகினர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க