தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில்,வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு,பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.இதனால் சர்கார் படத்தை கொண்டாட விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அந்த வகையில் கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றமான கொல்லம் நண்பன்ஸ், இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டை நடிகர் விஜய்க்காக உருவாக்கி உள்ளனர்.இந்த கட்-அவுட்டின் உயரம் 175 அடி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில்,மலையாள நடிகர் சன்னி வைன் இந்த கட் அவுட்டை இன்று மாலை திறந்து வைக்கிறார்.மேலும்,இந்த திறப்பு விழாவில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்